2. பால் வினியோகம், குடிநீர் மற்றும் தினசரி பத்திரிக்கை வினியோகம்.
3. பொதுமக்களுக்கு தேவையான காய்கறிகள் பழங்கள் தோட்டக்கலை துறை மூலமாக சென்னை மற்றும் அனைத்து மாவட்டங்களிலும் வாகனங்கள் மூலம் வழங்க ஏற்பாடு.
4. தலைமைச் செயலகம் ,மாவட்டங்களில் உள்ள அத்தியாவசிய துறைகள் மட்டும் இயங்கும்.
5. E-commerce சேவைகள் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்படும்.
6. உணவகங்களில் காலை 6.00மணி முதல் 10.00மணி வரையிலும், நண்பகல் 12.00மணி முதல் 3.00 மணி வரையிலும் மாலை 6.00 மணி முதல் இரவு 9.00மணி வரையிலும் பார்சல் சேவை மட்டும் அனுமதிக்கப்படுகிறது.
7. மேலும் E-commerce மூலம் உணவு வினியோகம் செய்யும் நிறுவனங்களும் மேற்கண்ட நேரங்களில் மட்டுமே செயல்படும்.
8. பெட்ரோல் மற்றும் டீசல் பங்குகள் வழக்கம் போல் செயல்படும்.
9. ATM மற்றும் அவற்றிற்கான சேவைகள் அனுமதிக்கப்படும்.
10. தனியார் நிறுவனங்கள், வங்கிகள் ,காப்பீட்டு நிறுவனங்கள் ,தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் போன்றவற்றில் பணிபுரிபவர்கள் வீட்டில் இருந்தே பணிபுரிய கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
11. வேளாண் பொருட்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்லும் வாகனம் மற்றும் சரக்கு வாகனங்கள் அனுமதிக்கப்படும்.
12. செய்தி மற்றும் ஊடக நிறுவனங்கள் வழக்கம் போல் செயல்பட அனுமதி அளிக்கப்படுகிறது.
13. உரிய மருத்துவ காரணங்கள் மற்றும் இறப்புகளுக்கு மட்டும் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ- பாஸ் அனுமதி.
14. மருத்துவ காரணங்களுக்காக மாவட்டத்துக்குள் பயணிக்க இ-பதிவு தேவை இல்லை.
15. தடையின்றி தொடர்ந்து செயல்பட வேண்டிய தொடர் செயல்முறை தொழிற்சாலைகள் ,அத்தியாவசிய பொருட்கள் மருத்துவ உபகரணங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள், ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ள வழிகாட்டுதலின்படி அனுமதிக்கப்படும்.
போன்றவற்றிற்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது மேலும் ஊரடங்கின் போது தேவையில்லாத காரணங்களுக்காக வெளியில் சுற்றித் திரிபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளது.
No comments:
Post a Comment