நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வரும் நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது குணமடைந்தவர்கள் இடையே கருப்பு மற்றும் வெள்ளை பூஞ்சை தாக்குதல் அதிகரித்து வருகிறது தற்பொழுது நாடு முழுவதும் எட்டாயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கருப்பு பூஞ்சைத் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
டெல்லி மற்றும் உத்தரப் பிரதேசம் இடையே வெள்ளைப் பூஞ்சை தொற்றும் கண்டறியப்பட்டது இது கருப்பு பூஞ்சை விட கொடியது என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில் தற்போது காசியாபாத்தில் ஒருவருக்கு மஞ்சள் பூஞ்சைத் தொற்று கண்டறியப்பட்டு உள்ளது இது கருப்பு மற்றும் வெள்ளை பூஞ்சைகள் விட கொடியது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது மற்ற இரு பூஞ்சைகள் தாக்குதலை விட கடுமையாக உள்ளுறுப்புகளை தாக்கக் கூடியது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர் மேலும் மஞ்சள் பூஞ்சை உடலின் உட்புற மாக தொடங்குகிறது உள்ளுறுப்புகளில் சீழ் கசிவை ஏற்படுத்தக்கூடியது இது உறுப்பு செயலிழப்புக்கும் வழிவகுக்கும் என்று மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.
அதிக அளவிலான ஸ்டெராய்டுகள் எடுத்துக் கொள்வது ,சுற்றுப்புறத் தூய்மை இன்மை, பாக்டீரியா எதிர்ப்பு மருந்துகள் ,சீரற்ற ஆக்சிஜன் பயன்பாடு போன்றவயே பூ பூஞ்சை தாக்குதலுக்கு காரணம் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment