Monday, 24 May 2021

கருப்பு ,வெள்ளை பூஞ்சைகளை தொடர்ந்து தற்போது மஞ்சள் பூஞ்சை தொற்று!!!!

கருப்பு மற்றும் வெள்ளை பூஞ்சகளை தொடர்ந்து தற்போது மஞ்சள் பூஞ்சை தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக உத்தரபிரதேச அரசு தெரிவித்துள்ளது .இந்த வைரஸ்  மற்ற கருப்பு மற்றும் வெள்ளை பூஞ்சை வைரஸ் விட கொடூரமானது என தெரிவித்துள்ளது.
            நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வரும் நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது குணமடைந்தவர்கள் இடையே கருப்பு மற்றும் வெள்ளை பூஞ்சை தாக்குதல் அதிகரித்து வருகிறது தற்பொழுது நாடு முழுவதும் எட்டாயிரத்திற்கும்  மேற்பட்டோருக்கு கருப்பு பூஞ்சைத் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
           டெல்லி மற்றும் உத்தரப் பிரதேசம் இடையே வெள்ளைப் பூஞ்சை தொற்றும் கண்டறியப்பட்டது இது கருப்பு பூஞ்சை விட கொடியது என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். 
               இந்நிலையில் தற்போது காசியாபாத்தில் ஒருவருக்கு மஞ்சள் பூஞ்சைத் தொற்று கண்டறியப்பட்டு உள்ளது இது கருப்பு மற்றும் வெள்ளை  பூஞ்சைகள் விட கொடியது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
           இது மற்ற இரு பூஞ்சைகள் தாக்குதலை விட கடுமையாக உள்ளுறுப்புகளை  தாக்கக் கூடியது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர் மேலும் மஞ்சள் பூஞ்சை உடலின் உட்புற மாக தொடங்குகிறது உள்ளுறுப்புகளில் சீழ் கசிவை ஏற்படுத்தக்கூடியது இது உறுப்பு செயலிழப்புக்கும் வழிவகுக்கும் என்று மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். 
          அதிக அளவிலான ஸ்டெராய்டுகள் எடுத்துக் கொள்வது ,சுற்றுப்புறத் தூய்மை இன்மை, பாக்டீரியா எதிர்ப்பு மருந்துகள் ,சீரற்ற ஆக்சிஜன் பயன்பாடு போன்றவயே பூ பூஞ்சை தாக்குதலுக்கு காரணம் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 

மயிலாடுதுறையில் வாழ்வாதாரத்தை இழந்துள்ள திருநங்கைகளுக்கு ,MLA உதவி.

மயிலாடுதுறையில் ஊரடங்கால் தனது வாழ்வாதாரத்தை இழந்து உள்ள திருநங்கைகளுக்கு பூம்புகார் எம்எல்ஏ நிவேதா முருகன் அவர்கள் ஒரு வாரத்திற்குத் தேவையான அரிசி காய்கறி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை வழங்கி உதவி செய்தார்.
          மயிலாடுதுறை மாவட்டத்தில் மூன்றாம் பாலினத்தவறான திருநங்கைகள் 20 பேர் வசித்து வருகின்றனர் இவர்கள் பேருந்து நிலையம், ரயில்கள் ,கடைகளில் தினந்தோறும் சென்று பணம் வசூல் செய்து வாழ்க்கை நடத்தி வருகின்றனர். 
         இந்நிலையில் கொரோனா முன்னெச்சரிக்கை ஊரடங்கு காரணமாக ரயில் இயங்காத காரணத்தினாலும் கடைகள் மூடப்பட்டதாலும் இவர்கள் வாழ்வாதாரத்தை இழந்து வீடுகளுக்குள் முடங்கி உள்ளனர்.
         இதனை அறிந்த பூம்புகார் சட்டப்பேரவை உறுப்பினர் திரு நிவேதா முருகன் அவர்கள் ,பசி பட்டினியால்  தவித்த திருநங்கைகளுக்கு ஒரு வாரத்திற்குத் தேவையான அரிசி காய்கறி மளிகை பொருள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை  வழங்கினார். 
            மேலும் அரசு சலுகைகள் அனைத்தும் கிடைக்க நடவடிக்கை மேற்கொள்வதாகவும் உறுதியளித்தார். 

Sunday, 23 May 2021

இந்த முழு ஊரடங்கு காலத்தில் கீழ்கண்டவை களுக்குதமிழக அரசுஅனுமதி அளித்துள்ளது.

1.மருந்தகங்கள் நாட்டு மருந்து கடைகள் கால்நடை மருந்தகங்கள். 
2. பால் வினியோகம், குடிநீர் மற்றும் தினசரி பத்திரிக்கை வினியோகம். 
3. பொதுமக்களுக்கு தேவையான காய்கறிகள் பழங்கள் தோட்டக்கலை துறை மூலமாக சென்னை மற்றும் அனைத்து மாவட்டங்களிலும் வாகனங்கள் மூலம் வழங்க ஏற்பாடு. 
4. தலைமைச் செயலகம் ,மாவட்டங்களில் உள்ள  அத்தியாவசிய துறைகள் மட்டும் இயங்கும். 
5. E-commerce சேவைகள் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்படும். 
6. உணவகங்களில் காலை 6.00மணி முதல் 10.00மணி வரையிலும், நண்பகல் 12.00மணி முதல் 3.00 மணி வரையிலும் மாலை 6.00 மணி முதல் இரவு 9.00மணி வரையிலும் பார்சல் சேவை மட்டும் அனுமதிக்கப்படுகிறது. 
7. மேலும் E-commerce மூலம் உணவு வினியோகம் செய்யும் நிறுவனங்களும் மேற்கண்ட நேரங்களில் மட்டுமே செயல்படும்.
8. பெட்ரோல் மற்றும் டீசல் பங்குகள் வழக்கம் போல் செயல்படும்.
9. ATM மற்றும் அவற்றிற்கான சேவைகள் அனுமதிக்கப்படும்.
10. தனியார் நிறுவனங்கள்,  வங்கிகள் ,காப்பீட்டு நிறுவனங்கள் ,தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் போன்றவற்றில் பணிபுரிபவர்கள் வீட்டில் இருந்தே பணிபுரிய கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 
11. வேளாண் பொருட்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்லும் வாகனம் மற்றும் சரக்கு வாகனங்கள் அனுமதிக்கப்படும். 
12. செய்தி மற்றும் ஊடக நிறுவனங்கள் வழக்கம் போல் செயல்பட அனுமதி அளிக்கப்படுகிறது. 
13. உரிய மருத்துவ காரணங்கள் மற்றும் இறப்புகளுக்கு மட்டும் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல  இ- பாஸ் அனுமதி. 
14. மருத்துவ காரணங்களுக்காக மாவட்டத்துக்குள் பயணிக்க இ-பதிவு தேவை இல்லை. 
15. தடையின்றி தொடர்ந்து செயல்பட வேண்டிய தொடர் செயல்முறை தொழிற்சாலைகள் ,அத்தியாவசிய பொருட்கள் மருத்துவ உபகரணங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள், ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ள வழிகாட்டுதலின்படி அனுமதிக்கப்படும். 
                  போன்றவற்றிற்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது மேலும் ஊரடங்கின் போது  தேவையில்லாத காரணங்களுக்காக வெளியில் சுற்றித் திரிபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளது. 





Saturday, 22 May 2021

தமிழகம் முழுவதும்இன்றும் நாளையும்-புதிய அறிவிப்பு??!!

தமிழகத்தில் முழு ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்பட்ட காரணத்தினால் சென்னையிலிருந்து தன் சொந்த ஊருக்கு திரும்பும் பயணிகளுக்காக தமிழக அரசு சிறப்பு பேருந்துகளை ஏற்பாடு செய்துள்ளது.
            தமிழகம் முழுவதும் இன்றும் நாளையும் 4500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது . 
              இதில் சென்னையில் இருந்து மற்ற ஊர்களுக்கு 1500 சிறப்பு பேருந்துகளும் திருச்சி ,கோவை ,மதுரை ,போன்ற முக்கிய நகரங்களுக்கு 3000 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். பயணிகள் எண்ணிக்கையை பொறுத்து கூடுதல் பேருந்துகள் இயக்கவும் ஏற்பாடு செய்யப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில்முழு ஊரடங்குநீட்டிப்பு _அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!!

தமிழகத்தில் முழு ஊரடங்கை மேலும் ஒரு வாரம் அதாவது மே 31-ஆம் தேதி வரை நீட்டித்து முதல்வர் மு. க ஸ்டாலின் அவர்கள் உத்தரவிட்டுள்ளார். 
             மேலும் ஒரு  வாரம் ஊரடங்கு நீடித்த நிலையில் நாளை ஒரு நாள் மட்டும் கடைகள் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. இதனால் நாளை ,முழு ஊரடங்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. 
                ஊரடங்கில்  மருந்தகங்கள் , நாட்டு மருந்து கடைகள், கால்நடை மருந்தகங்கள் ஆகியவற்றிற்கு    அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் பெட்ரோல் பங்குகள் வழக்கம் போல் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் நாளை முழு ஊரடங்கு இல்லை!!தமிழக அரசு அதிரடி!!!

தமிழகத்தில் முழு ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பான அறிவிப்பு இன்னும் சற்று நேரத்தில் வெளியாக உள்ளது.
            இந்நிலையில் தளர்வுகள் அற்ற முழு உறங்கு திங்கள் முதல் நீட்டிக்கலாம் என்பதால் நாளை கடைகளை திறக்க அனுமதிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
             அதனால் தமிழகத்தில் தமிழகத்தில் நாளை ஒருநாள் மளிகை காய்கறி முதலிய அத்தியாவசிய பொருட்கள் வாங்க கடைகள் திறக்க அனுமதி வழங்கப்படும் என கூறப்படுகிறது.

இந்தியாவில் கருப்புப் பூஞ்சை நோய்க்கு 8,488 பேர் பாதிப்பு!!!

இந்தியாவில் 24 மாநிலங்களில் கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது
      
           இந்தியா முழுவதும் கருப்பு பூஞ்சை நோய்க்கு 8848 பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் அதிகபட்சமாக    குஜராத்தில் 2881 
பேருக்கும்             மகாராஷ்டிராவில் 2,000 பேருக்கும்              ஆந்திராவில் 910 பேருக்கும்              மத்திய பிரதேசத்தில் 710 பேருக்கும்                தமிழகத்தில் 48  பேருக்கும் இந்த நோய் தொற்று ஏற்பட்டுள்ளதாக அழிக்கப்பட்டுள்ளது. 

BREAKING:தமிழகத்தில் தளர்வுகள் அற்ற ஊரடங்கு -தமிழக அரசு

தமிழகத்தில் தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு அமல் படுத்த அரசு பரிசீலித்து உள்ளதாக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளார்.
              மேலும் பால்,  காய்கறி, மருந்தகம் ,உள்ளிட்ட அத்தியாவசிய கடைகளுக்கு அனுமதி தரவேண்டும் என்றும் நடமாடும் வாகனங்கள் மூலம் வீடுகளுக்கே சென்று பொருள்களை வழங்க வேண்டுமெனவும் அதிமுக தரப்பில் ஆலோசனை தரப்பட்டுள்ளது.
                 பாமக தரப்பில் ஆலோசனை  தெரிவிக்கையில்  ஐந்து நாட்களுக்கு ஒரு நாள்  மட்டும் அத்தியாவசிய கடைகளை திறக்க  வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

கடும் கட்டுப்பாடுகளுடன்இரண்டு வாரம் முழு ஊரடங்கு!!!

தமிழகத்தில் முழு  ஊரடங்கை நீட்டிப்பது குறித்து மருத்துவ நிபுணர் குழுவுடன்  முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்கள் ஆலோசனை நடத்தி வருகிறார். 
            இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்கள் தமிழகத்தில் கொரோனா பதிப்பு மே இறுதியில் அல்லது ஜூன் முதல் வாரத்தில் உச்சத்தை அடையும் என்றும், கடந்த இரண்டு வாரங்களில் எடுத்துவரும் நடவடிக்கை காரணமாக தொற்று பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
               மேலும்  கொரோனா பரவலை தடுக்க தமிழகத்தில் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தும் கட்டாயம் ஏற்பட்டுள்ளது என்றும் ஊரடங்கை விடுமுறை எனக்கருதி பொதுமக்கள் சிலர் ஊர் சுற்றுகின்றனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார் மேலும் தளர்வுகள் அற்ற  முழு ஊரடங்கு தொடர்பாக மதியம் 1.00 மணிக்கு அறிவிக்க வேண்டி உள்ளது எனவும் தெரிவித்துள்ளார் . 
          மேலும் தளர்வுகள்  அற்ற கட்டுப்பாடுகளுடன் கூடிய முழு ஊரடங்கு 2 வாரங்களுக்கு நீட்டிக்க வேண்டும் என்று மருத்துவ வல்லுநர்கள் குழு  தமிழக அரசுக்கு பரிந்துரை  செய்துள்ளது  .   

Friday, 21 May 2021

தமிழகத்தில் இடி மின்னலுடன் மழை மீனவர்களுக்கு எச்சரிக்கை.!!

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் பரவலாக இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
         மேலும் மே 24,25 ஆகிய தேதிகளில் தமிழகம் புதுச்சேரி காரைக்காலில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும் எனவும் அறிவித்துள்ளது. 
           அடுத்த இரண்டு நாட்களுக்கு கடலோர பகுதியில் மணிக்கு 55 முதல் 65 கிலோ மீட்டர் வேகத்தில பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. 

கருப்பு ,வெள்ளை பூஞ்சைகளை தொடர்ந்து தற்போது மஞ்சள் பூஞ்சை தொற்று!!!!

கருப்பு மற்றும் வெள்ளை பூஞ்சகளை தொடர்ந்து தற்போது மஞ்சள் பூஞ்சை தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக உத்தரபிரதேச அரசு தெரிவித்துள்ளது .இந...