Tuesday, 18 May 2021

ஊரடங்கு உத்தரவை மீறி மயிலாடுதுறை மாவட்டத்தில் டீ விற்பனை செய்த 27பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது:-


மயிலாடுதுறை மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவை நிறைவேற்றுவதற்கு காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. ஊரடங்கு உத்தரவை கடைபிடிக்காதவர்களின் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் மயிலாடுதுறையில் மூன்று இரு சக்கர வாகனம் 13 சைக்கிள்களில் டீ விற்பனை செய்த நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோல் செம்பனார்கோவில் பெரம்பூர் சீர்காழி கொள்ளிடம் பொறையார் வைத்தீஸ்வரன் கோவில் உள்ளிட்ட பகுதிகளில் இருசக்கர வாகனம் மற்றும் சைக்கிள்களில் டீ விற்பனை செய்தவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மாவட்டம் முழுவதும் தடையை மீறி டீ விற்பனை செய்த 27 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு 4 இருசக்கர வாகனம் 19 சைக்கிள்கள் கையில் டீ கேன் விற்பனை செய்த 4 பேர் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தொடர்ந்து போலீசார் தேவை இல்லாமல் சுற்றித் திரிபவர்களுக்கு  எச்சரிக்கை செய்து வீட்டிற்கு திருப்பி அனுப்பி வருகின்றனர்.

No comments:

Post a Comment

கருப்பு ,வெள்ளை பூஞ்சைகளை தொடர்ந்து தற்போது மஞ்சள் பூஞ்சை தொற்று!!!!

கருப்பு மற்றும் வெள்ளை பூஞ்சகளை தொடர்ந்து தற்போது மஞ்சள் பூஞ்சை தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக உத்தரபிரதேச அரசு தெரிவித்துள்ளது .இந...