Tuesday, 18 May 2021

விலங்குகளுக்கும் பரவும் கரோனா: மயிலாடுதுறை மாயூரநாதர் கோயில் யானை அபயாம்பாளுக்கு முன்னெச்சரிக்கையாக கபசுரக் குடிநீர், மூலிகை சாம்பிராணி கொடுத்த யானைப்பாகன்.





தமிழகத்தில் கரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. மனிதர்களிடையே மட்டுமே பரவி வந்த கரோனா தற்போது விலங்குகளுக்கும் பரவும் என்ற தகவலும், ஐதராபாத்தில் உள்ள நேரு விலங்கியல் பூங்காவில் உள்ள 8 சிங்கங்களுக்கு அண்மையில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட சம்பவமும் வன விலங்குகள் ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.                

இந்நிலையில், மயிலாடுதுறை மாயூரநாதர் கோயிலில் கரோனா பரவலைத் தடுக்க பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்த குடிநீரை மாயூரநாதர் கோயில் யானை அபயாம்பாளுக்கு வழங்கினார் கோயில் பாகன் வினோத். மேலும், யானைக்கு மூலிகை சாம்பிராணி புகை போட்டு யானைக்கு எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார் கோயில் பாகன்.

No comments:

Post a Comment

கருப்பு ,வெள்ளை பூஞ்சைகளை தொடர்ந்து தற்போது மஞ்சள் பூஞ்சை தொற்று!!!!

கருப்பு மற்றும் வெள்ளை பூஞ்சகளை தொடர்ந்து தற்போது மஞ்சள் பூஞ்சை தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக உத்தரபிரதேச அரசு தெரிவித்துள்ளது .இந...