Monday, 24 May 2021

கருப்பு ,வெள்ளை பூஞ்சைகளை தொடர்ந்து தற்போது மஞ்சள் பூஞ்சை தொற்று!!!!

கருப்பு மற்றும் வெள்ளை பூஞ்சகளை தொடர்ந்து தற்போது மஞ்சள் பூஞ்சை தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக உத்தரபிரதேச அரசு தெரிவித்துள்ளது .இந்த வைரஸ்  மற்ற கருப்பு மற்றும் வெள்ளை பூஞ்சை வைரஸ் விட கொடூரமானது என தெரிவித்துள்ளது.
            நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வரும் நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது குணமடைந்தவர்கள் இடையே கருப்பு மற்றும் வெள்ளை பூஞ்சை தாக்குதல் அதிகரித்து வருகிறது தற்பொழுது நாடு முழுவதும் எட்டாயிரத்திற்கும்  மேற்பட்டோருக்கு கருப்பு பூஞ்சைத் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
           டெல்லி மற்றும் உத்தரப் பிரதேசம் இடையே வெள்ளைப் பூஞ்சை தொற்றும் கண்டறியப்பட்டது இது கருப்பு பூஞ்சை விட கொடியது என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். 
               இந்நிலையில் தற்போது காசியாபாத்தில் ஒருவருக்கு மஞ்சள் பூஞ்சைத் தொற்று கண்டறியப்பட்டு உள்ளது இது கருப்பு மற்றும் வெள்ளை  பூஞ்சைகள் விட கொடியது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
           இது மற்ற இரு பூஞ்சைகள் தாக்குதலை விட கடுமையாக உள்ளுறுப்புகளை  தாக்கக் கூடியது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர் மேலும் மஞ்சள் பூஞ்சை உடலின் உட்புற மாக தொடங்குகிறது உள்ளுறுப்புகளில் சீழ் கசிவை ஏற்படுத்தக்கூடியது இது உறுப்பு செயலிழப்புக்கும் வழிவகுக்கும் என்று மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். 
          அதிக அளவிலான ஸ்டெராய்டுகள் எடுத்துக் கொள்வது ,சுற்றுப்புறத் தூய்மை இன்மை, பாக்டீரியா எதிர்ப்பு மருந்துகள் ,சீரற்ற ஆக்சிஜன் பயன்பாடு போன்றவயே பூ பூஞ்சை தாக்குதலுக்கு காரணம் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 

மயிலாடுதுறையில் வாழ்வாதாரத்தை இழந்துள்ள திருநங்கைகளுக்கு ,MLA உதவி.

மயிலாடுதுறையில் ஊரடங்கால் தனது வாழ்வாதாரத்தை இழந்து உள்ள திருநங்கைகளுக்கு பூம்புகார் எம்எல்ஏ நிவேதா முருகன் அவர்கள் ஒரு வாரத்திற்குத் தேவையான அரிசி காய்கறி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை வழங்கி உதவி செய்தார்.
          மயிலாடுதுறை மாவட்டத்தில் மூன்றாம் பாலினத்தவறான திருநங்கைகள் 20 பேர் வசித்து வருகின்றனர் இவர்கள் பேருந்து நிலையம், ரயில்கள் ,கடைகளில் தினந்தோறும் சென்று பணம் வசூல் செய்து வாழ்க்கை நடத்தி வருகின்றனர். 
         இந்நிலையில் கொரோனா முன்னெச்சரிக்கை ஊரடங்கு காரணமாக ரயில் இயங்காத காரணத்தினாலும் கடைகள் மூடப்பட்டதாலும் இவர்கள் வாழ்வாதாரத்தை இழந்து வீடுகளுக்குள் முடங்கி உள்ளனர்.
         இதனை அறிந்த பூம்புகார் சட்டப்பேரவை உறுப்பினர் திரு நிவேதா முருகன் அவர்கள் ,பசி பட்டினியால்  தவித்த திருநங்கைகளுக்கு ஒரு வாரத்திற்குத் தேவையான அரிசி காய்கறி மளிகை பொருள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை  வழங்கினார். 
            மேலும் அரசு சலுகைகள் அனைத்தும் கிடைக்க நடவடிக்கை மேற்கொள்வதாகவும் உறுதியளித்தார். 

Sunday, 23 May 2021

இந்த முழு ஊரடங்கு காலத்தில் கீழ்கண்டவை களுக்குதமிழக அரசுஅனுமதி அளித்துள்ளது.

1.மருந்தகங்கள் நாட்டு மருந்து கடைகள் கால்நடை மருந்தகங்கள். 
2. பால் வினியோகம், குடிநீர் மற்றும் தினசரி பத்திரிக்கை வினியோகம். 
3. பொதுமக்களுக்கு தேவையான காய்கறிகள் பழங்கள் தோட்டக்கலை துறை மூலமாக சென்னை மற்றும் அனைத்து மாவட்டங்களிலும் வாகனங்கள் மூலம் வழங்க ஏற்பாடு. 
4. தலைமைச் செயலகம் ,மாவட்டங்களில் உள்ள  அத்தியாவசிய துறைகள் மட்டும் இயங்கும். 
5. E-commerce சேவைகள் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்படும். 
6. உணவகங்களில் காலை 6.00மணி முதல் 10.00மணி வரையிலும், நண்பகல் 12.00மணி முதல் 3.00 மணி வரையிலும் மாலை 6.00 மணி முதல் இரவு 9.00மணி வரையிலும் பார்சல் சேவை மட்டும் அனுமதிக்கப்படுகிறது. 
7. மேலும் E-commerce மூலம் உணவு வினியோகம் செய்யும் நிறுவனங்களும் மேற்கண்ட நேரங்களில் மட்டுமே செயல்படும்.
8. பெட்ரோல் மற்றும் டீசல் பங்குகள் வழக்கம் போல் செயல்படும்.
9. ATM மற்றும் அவற்றிற்கான சேவைகள் அனுமதிக்கப்படும்.
10. தனியார் நிறுவனங்கள்,  வங்கிகள் ,காப்பீட்டு நிறுவனங்கள் ,தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் போன்றவற்றில் பணிபுரிபவர்கள் வீட்டில் இருந்தே பணிபுரிய கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 
11. வேளாண் பொருட்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்லும் வாகனம் மற்றும் சரக்கு வாகனங்கள் அனுமதிக்கப்படும். 
12. செய்தி மற்றும் ஊடக நிறுவனங்கள் வழக்கம் போல் செயல்பட அனுமதி அளிக்கப்படுகிறது. 
13. உரிய மருத்துவ காரணங்கள் மற்றும் இறப்புகளுக்கு மட்டும் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல  இ- பாஸ் அனுமதி. 
14. மருத்துவ காரணங்களுக்காக மாவட்டத்துக்குள் பயணிக்க இ-பதிவு தேவை இல்லை. 
15. தடையின்றி தொடர்ந்து செயல்பட வேண்டிய தொடர் செயல்முறை தொழிற்சாலைகள் ,அத்தியாவசிய பொருட்கள் மருத்துவ உபகரணங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள், ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ள வழிகாட்டுதலின்படி அனுமதிக்கப்படும். 
                  போன்றவற்றிற்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது மேலும் ஊரடங்கின் போது  தேவையில்லாத காரணங்களுக்காக வெளியில் சுற்றித் திரிபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளது. 





Saturday, 22 May 2021

தமிழகம் முழுவதும்இன்றும் நாளையும்-புதிய அறிவிப்பு??!!

தமிழகத்தில் முழு ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்பட்ட காரணத்தினால் சென்னையிலிருந்து தன் சொந்த ஊருக்கு திரும்பும் பயணிகளுக்காக தமிழக அரசு சிறப்பு பேருந்துகளை ஏற்பாடு செய்துள்ளது.
            தமிழகம் முழுவதும் இன்றும் நாளையும் 4500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது . 
              இதில் சென்னையில் இருந்து மற்ற ஊர்களுக்கு 1500 சிறப்பு பேருந்துகளும் திருச்சி ,கோவை ,மதுரை ,போன்ற முக்கிய நகரங்களுக்கு 3000 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். பயணிகள் எண்ணிக்கையை பொறுத்து கூடுதல் பேருந்துகள் இயக்கவும் ஏற்பாடு செய்யப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில்முழு ஊரடங்குநீட்டிப்பு _அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!!

தமிழகத்தில் முழு ஊரடங்கை மேலும் ஒரு வாரம் அதாவது மே 31-ஆம் தேதி வரை நீட்டித்து முதல்வர் மு. க ஸ்டாலின் அவர்கள் உத்தரவிட்டுள்ளார். 
             மேலும் ஒரு  வாரம் ஊரடங்கு நீடித்த நிலையில் நாளை ஒரு நாள் மட்டும் கடைகள் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. இதனால் நாளை ,முழு ஊரடங்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. 
                ஊரடங்கில்  மருந்தகங்கள் , நாட்டு மருந்து கடைகள், கால்நடை மருந்தகங்கள் ஆகியவற்றிற்கு    அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் பெட்ரோல் பங்குகள் வழக்கம் போல் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் நாளை முழு ஊரடங்கு இல்லை!!தமிழக அரசு அதிரடி!!!

தமிழகத்தில் முழு ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பான அறிவிப்பு இன்னும் சற்று நேரத்தில் வெளியாக உள்ளது.
            இந்நிலையில் தளர்வுகள் அற்ற முழு உறங்கு திங்கள் முதல் நீட்டிக்கலாம் என்பதால் நாளை கடைகளை திறக்க அனுமதிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
             அதனால் தமிழகத்தில் தமிழகத்தில் நாளை ஒருநாள் மளிகை காய்கறி முதலிய அத்தியாவசிய பொருட்கள் வாங்க கடைகள் திறக்க அனுமதி வழங்கப்படும் என கூறப்படுகிறது.

இந்தியாவில் கருப்புப் பூஞ்சை நோய்க்கு 8,488 பேர் பாதிப்பு!!!

இந்தியாவில் 24 மாநிலங்களில் கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது
      
           இந்தியா முழுவதும் கருப்பு பூஞ்சை நோய்க்கு 8848 பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் அதிகபட்சமாக    குஜராத்தில் 2881 
பேருக்கும்             மகாராஷ்டிராவில் 2,000 பேருக்கும்              ஆந்திராவில் 910 பேருக்கும்              மத்திய பிரதேசத்தில் 710 பேருக்கும்                தமிழகத்தில் 48  பேருக்கும் இந்த நோய் தொற்று ஏற்பட்டுள்ளதாக அழிக்கப்பட்டுள்ளது. 

BREAKING:தமிழகத்தில் தளர்வுகள் அற்ற ஊரடங்கு -தமிழக அரசு

தமிழகத்தில் தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு அமல் படுத்த அரசு பரிசீலித்து உள்ளதாக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளார்.
              மேலும் பால்,  காய்கறி, மருந்தகம் ,உள்ளிட்ட அத்தியாவசிய கடைகளுக்கு அனுமதி தரவேண்டும் என்றும் நடமாடும் வாகனங்கள் மூலம் வீடுகளுக்கே சென்று பொருள்களை வழங்க வேண்டுமெனவும் அதிமுக தரப்பில் ஆலோசனை தரப்பட்டுள்ளது.
                 பாமக தரப்பில் ஆலோசனை  தெரிவிக்கையில்  ஐந்து நாட்களுக்கு ஒரு நாள்  மட்டும் அத்தியாவசிய கடைகளை திறக்க  வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

கடும் கட்டுப்பாடுகளுடன்இரண்டு வாரம் முழு ஊரடங்கு!!!

தமிழகத்தில் முழு  ஊரடங்கை நீட்டிப்பது குறித்து மருத்துவ நிபுணர் குழுவுடன்  முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்கள் ஆலோசனை நடத்தி வருகிறார். 
            இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்கள் தமிழகத்தில் கொரோனா பதிப்பு மே இறுதியில் அல்லது ஜூன் முதல் வாரத்தில் உச்சத்தை அடையும் என்றும், கடந்த இரண்டு வாரங்களில் எடுத்துவரும் நடவடிக்கை காரணமாக தொற்று பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
               மேலும்  கொரோனா பரவலை தடுக்க தமிழகத்தில் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தும் கட்டாயம் ஏற்பட்டுள்ளது என்றும் ஊரடங்கை விடுமுறை எனக்கருதி பொதுமக்கள் சிலர் ஊர் சுற்றுகின்றனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார் மேலும் தளர்வுகள் அற்ற  முழு ஊரடங்கு தொடர்பாக மதியம் 1.00 மணிக்கு அறிவிக்க வேண்டி உள்ளது எனவும் தெரிவித்துள்ளார் . 
          மேலும் தளர்வுகள்  அற்ற கட்டுப்பாடுகளுடன் கூடிய முழு ஊரடங்கு 2 வாரங்களுக்கு நீட்டிக்க வேண்டும் என்று மருத்துவ வல்லுநர்கள் குழு  தமிழக அரசுக்கு பரிந்துரை  செய்துள்ளது  .   

Friday, 21 May 2021

தமிழகத்தில் இடி மின்னலுடன் மழை மீனவர்களுக்கு எச்சரிக்கை.!!

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் பரவலாக இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
         மேலும் மே 24,25 ஆகிய தேதிகளில் தமிழகம் புதுச்சேரி காரைக்காலில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும் எனவும் அறிவித்துள்ளது. 
           அடுத்த இரண்டு நாட்களுக்கு கடலோர பகுதியில் மணிக்கு 55 முதல் 65 கிலோ மீட்டர் வேகத்தில பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. 

தமிழகத்தில்முழு ஊரடங்கு நீட்டிப்பு ??தலைமைச் செயலாளர் ஆலோசனை.

தமிழகத்தில்  கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் இன்று தலைமைச் செயலாளர் இறையன்பு அவர்கள் காணொலி காட்சி மூலம் மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். 
          இந்த ஆலோசனை கூட்டத்தில் , ஊரடங்கு நீட்டிப்பு, கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் புயல் முன்னெச்சரிக்கை  நடவடிக்கைகள் குறித்து ஆலோசித்து வருகிறார். 
             மேலும் கொரோனா சிகிச்சை முறைகள் படுக்கை வசதிகள், ஆக்சிஜன் கையிருப்பு குறித்தும் சுகாதார செயலாளர உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார் இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு நாளை வெளியாகும் என தெரிகிறது. 

Thursday, 20 May 2021

பெட்ரோல் டீசல் விலை உயர்வு!!! காலை முதல் அமல்.

சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 17 காசுகள் அதிகரித்து ரூ 94.71 க்கும், டீசல் விலை 28 காசுகள் அதிகரித்து ரூ 88. 62 க்கும்
விற்பனை செய்யப்படுகிறது இந்த விலை உயர்வு காலை 6.30 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது. 
             ஏற்கனவே மக்கள் பல இன்னல்களை கொரோனாவால் சந்தித்து வரும் நிலையில் பெட்ரோல் டீசல் விலை அதிகரித்துள்ளதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 

மயிலாடுதுறை மருத்துவமனையில் செவிலியர் பற்றாக்குறை பணிகள் பாதிப்பு.!!

மயிலாடுதுறை மருத்துவமனையில் செவிலியர் பற்றாக்குறை பணிகள் பாதிக்கும் அபாயம்.மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் செவிலியர்கள் பற்றாக்குறையால் பணிகள், பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 
         மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் 105 செவிலியர்கள் பணியில் உள்ளனர். இவர்களில் 61 பேர் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றுகின்றனர்.இதில், 15க்கும் மேற்பட்டோர் மகப்பேறு உள்ளிட்ட காரணங்களால் விடுப்பில் சென்றுவிட்ட நிலையில் எஞ்சிய 90 செவிலியர்கள் 3 ஷிப்டுகளில் பணியாற்றி வருகின்றனர். தற்போது, கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் மயிலாடுதுறை மயூரா ஹாலில் ஏற்படுத்தப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை மையம் மற்றும் கொரோனா வகைப்படுத்தும் மையத்திலும் இந்த செவிலியர்கள் பணியமர்த்தப்படுகின்றன. 
      இதனால் ஏற்கெனவே செவிலியர்கள் பற்றாக்குறை ஏற்பட்டிருந்த நிலையில், செவிலியர்களுக்கு செய்யப்பட்ட கொரோனா பரிசோதனை முடிவில் 18 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் அவர்கள் பணிக்கு செல்லமுடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து, கூடுதல் செவிலியர்களை பணியமர்த்தக் கோரியும், தொடர்ச்சியாக பணியாற்றுபவர்களுக்கு தேவையான விடுப்பினை வழங்கக் கோரியும், தேவையான மருத்துவ உபகரணங்களை வழங்கக் கோரியும் செவிலியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தயாராகினர். இதுகுறித்த தகவல் அறிந்த மருத்துவமனை குடிமுறை மருத்துவ அலுவலர் செவிலியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, செவிலியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றித் தருவதாக உறுதியளித்தததைத் தொடர்ந்து செவிலியர்கள் பணியை தொடர்ந்தனர்.


பட்ஜெட்டில் வரும் 5G போன் அசத்தலான டிமென்சிட்டி 700 பிராசஸருடன்!!!

POCO M3 PRO அறிமுகம் உங்கள் பட்ஜெட்டில் வரும் 5G போன் அசத்தலான டிமென்சிட்டி 700 பிராசஸருடன்.

இந்த குறைந்த விலை POCO 5G போன்  நீண்ட காலமாக சந்தையில் பேசினால் ஒரு இடத்தைக் கண்டுபிடித்து வருகிறது, இருப்பினும் இது இறுதியாக அறிமுகப்படுத்தப்பட்டது. POCO ய லிருந்து அவரது முதல் 5G போன் இறுதியாக POCO M3 Pro 5G ஆக அறிமுகப்படுத்தப்பட்டது  இங்கே, இந்த மொபைல் போன் POCO இன் M சீரிஸின் புதிய மொபைல் போனாக  அறிமுகப்படுத்தப்பட்டது, POCO M3 சமீபத்தில் இந்த சீரிஸில் அறிமுகப்படுத்தப்பட்டது.

POCO  M3 Pro  5ஜி சிறப்பம்சங்கள் 

- 6.5 இன்ச் 1080×2400 பிக்சல் FHD+ 20:9 LCD ஸ்கிரீன்
- கார்னிங் கொரில்லா கிளாஸ் 3
- ஆக்டா கோர் மீடியாடெக் டிமென்சிட்டி 700 பிராசசஸர் 
- மாலி G57 MC2 GPU
- 4 ஜிபி LPDDR4X ரேம், 64 ஜிபி (UFS 2.2) மெமரி
- 6 ஜிபி LPDDR4X ரேம், 128 ஜிபி (UFS 2.2) மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆண்ட்ராய்டு 11 மற்றும் MIUI 12
- டூயல் சிம்
- 48 எம்பி பிரைமரி கேமரா, f/1.79, LED பிளாஷ்
- 2 எம்பி டெப்த் கேமரா
- 2 எம்பி மேக்ரோ கேமரா, f/2.4
- 8 எம்பி செல்பி கேமரா, f/2.0
- பக்கவாட்டில் கைரேகை சென்சார்
- 3.5 எம்எம் ஆடியோ ஜாக், எப்எம் ரேடியோ 
- 5ஜி SA/NSA, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 
- யுஎஸ்பி டைப் சி 
- 5000 எம்ஏஹெச் பேட்டரி
- 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் 

இந்த ஸ்மார்ட்போன் 6.5 இன்ச் FHD+ 90 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே, டிமென்சிட்டி 700, 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி, பக்கவாட்டில் கைரேகை சென்சார் வழங்கப்பட்டு இருக்கிறது.

புகைப்படங்களை எடுக்க 48 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி டெப்த் கேமரா, 2 எம்பி மேக்ரோ கேமரா, 8 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. பக்கவாட்டில் கைரேகை சென்சார், டூயல் சிம் ஸ்லாட், 5ஜி SA/NSA, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.1, யுஎஸ்பி டைப் சி வழங்கப்பட்டு இருக்கிறது.

POCO  M3 Pro  5ஜி விலை தகவல்.
 
போக்கோ எம்3 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் பவர் பிளாக், கூல் புளூ மற்றும் போக்கோ எல்லோ நிறங்களில் கிடைக்கிறது. இதன் 4 ஜிபி + 64 ஜிபி மெமரி மாடல் விலை 179 யூரோக்கள் இந்திய மதிப்பில் ரூ. 15,995, 6 ஜிபி + 128 ஜிபி மெமரி மாடல் விலை 199 யூரோக்கள் இந்திய மதிப்பில் ரூ. 17,780 என நிர்ணயம் செய்யப்ப டு௧ிறது. |


Tuesday, 18 May 2021

விலங்குகளுக்கும் பரவும் கரோனா: மயிலாடுதுறை மாயூரநாதர் கோயில் யானை அபயாம்பாளுக்கு முன்னெச்சரிக்கையாக கபசுரக் குடிநீர், மூலிகை சாம்பிராணி கொடுத்த யானைப்பாகன்.





தமிழகத்தில் கரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. மனிதர்களிடையே மட்டுமே பரவி வந்த கரோனா தற்போது விலங்குகளுக்கும் பரவும் என்ற தகவலும், ஐதராபாத்தில் உள்ள நேரு விலங்கியல் பூங்காவில் உள்ள 8 சிங்கங்களுக்கு அண்மையில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட சம்பவமும் வன விலங்குகள் ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.                

இந்நிலையில், மயிலாடுதுறை மாயூரநாதர் கோயிலில் கரோனா பரவலைத் தடுக்க பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்த குடிநீரை மாயூரநாதர் கோயில் யானை அபயாம்பாளுக்கு வழங்கினார் கோயில் பாகன் வினோத். மேலும், யானைக்கு மூலிகை சாம்பிராணி புகை போட்டு யானைக்கு எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார் கோயில் பாகன்.

ஊரடங்கு உத்தரவை மீறி மயிலாடுதுறை மாவட்டத்தில் டீ விற்பனை செய்த 27பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது:-


மயிலாடுதுறை மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவை நிறைவேற்றுவதற்கு காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. ஊரடங்கு உத்தரவை கடைபிடிக்காதவர்களின் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் மயிலாடுதுறையில் மூன்று இரு சக்கர வாகனம் 13 சைக்கிள்களில் டீ விற்பனை செய்த நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோல் செம்பனார்கோவில் பெரம்பூர் சீர்காழி கொள்ளிடம் பொறையார் வைத்தீஸ்வரன் கோவில் உள்ளிட்ட பகுதிகளில் இருசக்கர வாகனம் மற்றும் சைக்கிள்களில் டீ விற்பனை செய்தவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மாவட்டம் முழுவதும் தடையை மீறி டீ விற்பனை செய்த 27 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு 4 இருசக்கர வாகனம் 19 சைக்கிள்கள் கையில் டீ கேன் விற்பனை செய்த 4 பேர் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தொடர்ந்து போலீசார் தேவை இல்லாமல் சுற்றித் திரிபவர்களுக்கு  எச்சரிக்கை செய்து வீட்டிற்கு திருப்பி அனுப்பி வருகின்றனர்.

கருப்பு ,வெள்ளை பூஞ்சைகளை தொடர்ந்து தற்போது மஞ்சள் பூஞ்சை தொற்று!!!!

கருப்பு மற்றும் வெள்ளை பூஞ்சகளை தொடர்ந்து தற்போது மஞ்சள் பூஞ்சை தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக உத்தரபிரதேச அரசு தெரிவித்துள்ளது .இந...